பழனி உழவர் சந்தையில் பொதுமக்கள் - விவசாயிகள் தகராறு

பழனி உழவர் சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் அதிக விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்ததாக, பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்குமிடையே தகராறு ஏற்பட்டது.

பழனி உழவர் சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் அதிக விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்ததாக, பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்குமிடையே தகராறு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி உழவர் சந்தைக்கு தினமும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.இங்கு,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகக் கூட்டம் காணப்படும்.
பழனி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் இங்கு வந்து காய்கறிகளை இறக்க இலவசமாகஅரசுப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இங்கு,சமீப காலமாக விவசாயிகள்பொதுமக்களுக்கு காய்கறிகளை விற்பனை செய்யாமல்,மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். மேலும், உழவர் சந்தையில் காய்கறி வாங்கும் வியாபாரிகள்,சந்தைக்கு முன்பாகவேகடை போட்டு அந்தக் காய்கறிகளை விற்கின்றனர்.
இந்நிலையில்,ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோர் காய்கறிகள் வாங்க வந்திருந்தனர். உழவர் சந்தை அதிகாரிகள் தக்காளியை கிலோ ரூ.32 என விலை நிர்ணயித்திருந்தநிலையில்,விவசாயிகள் ரூ.40-க்கு விற்பனை செய்துள்ளனர். அதேநேரம், கடைகள்மற்றும்மொத்த வியாபாரிகளுக்கு ரூ.32-க்கு விற்பனை செய்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தட்டிக்கேட்ட போது,இருதரப்பினருக்குமிடையேதகராறு ஏற்பட்டது. பொதுமக்கள் ஒரு தரப்பாகவும், விவசாயிகள் ஒரு தரப்பாகவும் சேர்ந்து கொண்டதால்,சம்பவஇடத்துக்கு சார்-ஆட்சியர் வினீத்,வேளாண் அலுவலர் சுருளியப்பன் மற்றும் போலீஸார் வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனர்.
பின்னர், பொதுமக்களிடம் தரக்குறைவாகப்பேசியதாகவும்,வியாபாரிகளுக்கு தக்காளியை விற்ôகவும் 4கடைக்காரர்களை உழவர் சந்தை வேளாண் அலுவலர் காளிமுத்து சஸ்பெண்ட் செய்து வெளியேற்றினார்.
இதுதொடர்பாக,நெய்க்காரபட்டியைச்சேர்ந்த பீர்முகம்மது என்பவர் கூறுகையில், உழவர் சந்தைக்கு எப்போது வந்தாலும் காய்கறிகள் இருப்பதில்லை. ஆனால்,ஏராளமானகாய்கறிகள் வந்து இறக்கப்படுகின்றன.அனைத்தையும் வியாபாரிகளுக்கும்,உணவகங்களுக்குமே விற்கின்றனர்என்றார்.
மும்தாஜ் என்பவர் கூறுகையில், காய்கறிகளை அரைகிலோ, கால்கிலோ என கொடுப்பதே இல்லை. ஒரு கிலோவுக்கு குறைவாக தரமாட்டோம் என்கின்றனர். எடையும் சரியாக இருப்பதில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com