10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: திண்டுக்கல் மாவட்டத்தில் 94.44 சதவீதம் பேர் தேர்ச்சி

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டதில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 94.44 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டதில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 94.44 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் மற்றும் பழனி கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 26,885 மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதியிருந்தனர். அதற்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டதில், 25,391 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 94.44 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை விட 1.84 சதவீதம் கூடுலாகும்.
திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 188 பள்ளிகளைச் சேர்ந்த 16,997 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 16,209 பேர் தேர்ச்சி (95.36 சதவீதம்) அடைந்துள்ளனர். பழனி கல்வி மாவட்டத்தில் 148 பள்ளிகளைச் சேர்ந்த 9,888 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 9,182 மாணவர்கள் (92.86 சதவீதம்) தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
39 அரசுப் பள்ளிகள், 5 கள்ளர் சீர்மரபினர் பள்ளிகள், 1 ஆதிதிராவிடர் நலப் பள்ளி, 26 உதவிப் பெறும் பள்ளிகள், 8 சுயநிதிப் பள்ளிகள், 57  மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 136 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். கடந்த 2016ஆம் ஆண்டில் 139 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சிப் பெற்றிருந்தன. தற்போது 3 பள்ளிகளின் எண்ணிக்கை 100 சதவீதப் பட்டியலில் குறைந்துள்ளன.
 அதே நேரத்தில், 100 சதவீதம் தேர்ச்சி அடைந்த அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 36 ஆக இருந்தது. நிகழாண்டில் 3 பள்ளிகள் கூடுதலாக 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 100 சதவீதம் தேர்ச்சி அடைந்த அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ச.கோபிதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com