இந்தியை கட்டாயப் பாடமாக மாற்றும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்: ஆ.ராசா

இந்தியை கட்டாயப் பாடமாக மாற்றும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.

இந்தியை கட்டாயப் பாடமாக மாற்றும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மஹாலில் சனிக்கிழமை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், இந்தித் திணிப்பை எதிர்த்தும், நீட் தேர்வில் தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்கக் கோரியும் நடைபெற்ற கருத்தரங்குக்கு, திமுக துணைப் பொதுச் செயலர் இ.பெரியசாமி தலைமை வகித்தார்.
இதில் பங்கேற்று முன்னாள் அமைச்சரும், திமுக கொள்கை பரப்புச் செயலருமான ஆ.ராசா பேசியதாவது: பொருளாதார வசதி, வாய்ப்பு, தேவை ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவர் எந்த மொழியையும் கற்று அறிந்து கொள்வதில் தவறில்லை.
ஆனால், இந்தி மொழியை கட்டாயமாக திணிக்கும் முயற்சி கடந்த 1937ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்தி மொழிக்கு 17ஆம் நூற்றாண்டுக்கு முன்பு இலக்கிய வரலாறு கிடையாது.
பிறப்பால் மனிதன் 4 வகை என பிரிவினையை கற்பிக்கிறது சமஸ்கிருதம்.
ஆனால், பிறப்பால் அனைவரும் சமம் என 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகிற்கு கற்பித்து வருவது தமிழ் இலக்கியம் மட்டுமே. இந்தியில் கல்வி கற்ற வட மாநிலத்தவர்கள், தமிழகத்தில் குவாரிகளிலும், குல்பி ஐஸ் வியாபாரியாகவும், வட்டித் தொழில் செய்வோராகவும் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ் கற்றவர்கள் யாரும், இதுபோன்ற வேலைக்காக வடமாநிலங்களுக்கு செல்ல வில்லை. எனவே, 10ஆம் வகுப்பு வரை இந்தியை கட்டாயப் பாடமாக மாற்றும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.
முன்னதாக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலர் பெ.செந்தில்குமார் வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com