கொடைக்கானலில் வாத்து பிடிக்கும் போட்டி

கொடைக்கானல் ஏரியில் சனிக்கிழமை நடைபெற்ற வாத்து பிடிக்கும் போட்டியில் வாத்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கொடைக்கானல் ஏரியில் சனிக்கிழமை நடைபெற்ற வாத்து பிடிக்கும் போட்டியில் வாத்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கொடைக்கானல் போட் மற்றும் ரோயிங் கிளப் சார்பில் நடைபெற்ற இப்போட்டியின் தொடக்க விழாவுக்கு சங்கத் தலைவர் வி.ஆர்.ராமச்சந்திர துரைராஜா தலைமை வகித்தார். படகுப் போட்டியை கௌரவச் செயலர் பவானி சங்கர் தொடக்கி வைத்தார். நடுவர்களாக அமிதா சாட்டர்ஜி, லோகநாதன், மரியபால் சார்லஸ் ஆகியோர் இருந்தனர்.
படகுப் போட்டிகள்: கொடைக்கானல் ஏரியில் தட்டைப்படகு போட்டிகள், துடுப்பு போட்டிகள் உள்ளிட்ட 15 போட்டிகள் நடைபெற்றன.
இதில் ஜூனியர் சிறுவர் இரட்டையர் போட்டியில் விசால், நிதின் ஆகியோரும், ஜூனியர் சிறுமியர் ஒற்றையர் போட்டியில் லீனா பாத்திமாவும், சப்- ஜூனியர் சிறுவர் இரட்டையர் போட்டியில் கிரன் மற்றும் சாத்விக் ஆகியோரும், ஜூனியர் சிறுமியர் இரட்டையர் போட்டியில் வள்ளியம்மை மற்றும் ருகி ஆகியோரும், ஜூனியர் சிறுவர் ஒற்றையர் பிரிவில் நிதினும், பெண்கள் இரட்டையர் பிரிவில் மிந்தமி மற்றும் பிரியா ஆகியோரும், சப்- ஜூனியர் சிறுவர் ஒற்றையர் பிரிவில் கிரனும், சப்- ஜூனியர் சிறுமியர் ஒற்றையர் பிரிவில் சுமந்தாவும் வெற்றி பெற்றனர்.
வாத்து பிடிக்கும் போட்டி: இதைத் தொடர்ந்து நடைபெற்ற வாத்து பிடிக்கும் போட்டியில் 6 படகுகளில் 20-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 15 நிமிடங்களில் வாத்தை வீரர்கள் பிடிக்க வேண்டுமென்பது போட்டியின் விதி ஆகும். ஆனால் யாரும் வாத்தை பிடிக்காததால் வாத்து வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். இந்நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் யாஷித், பாபு, வெங்கடேசன் மற்றும் மேலாளர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் படகுப் போட்டி மற்றும் வாத்து பிடிக்கும் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com