கொடைக்கானலில் தேசிய சதுரங்கப் போட்டி: சென்னை வீரர் முதலிடம்

கொடைக்கானலில் நடைபெற்ற தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில், சென்னை வீரர் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

கொடைக்கானலில் நடைபெற்ற தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில், சென்னை வீரர் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
   கொடைக்கானலில் செயின்ட் பீட்டர்ஸ் சர்வதேசப் பள்ளி மைதானத்தில், முதன் முறையாக அகில இந்திய தரப்பட்டியல் சதுரங்கப் போட்டி கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. இப் போட்டியில், புதுதில்லி, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம்,புதுச்சேரி, தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 6 வயது முதல் 75 வயது வரையிலான 255 வீரர்கள் கலந்துகொண்டனர்.
போட்டியின் நடுவராக, சர்வதேச நடுவர் விஜயகுமார் செயல்பட்டார்.
   வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி, செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அப் பள்ளியின் இயக்குநர் ரோகன் சாம்பாபு தலைமை வகித்தார். இந்தியன் சதுரங்கப் பள்ளியின் துணைத் தலைவர் ஜேம்ஸ், காஞ்சிபுரம் மௌன்ட் சதுரங்க அகாதெமியை சேர்ந்த ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   இதில், முதல் பரிசை வென்ற சென்னை ஐ.சி.எஃப்.பைச் சேர்ந்த சையது அன்வர் சௌலிக்கு ரூ. 35 ஆயிரம் ரொக்கம் மற்றும் பரிசுக் கோப்பையை மீன்வளத் துறை உதவி இயக்குநர் சமீரன் வழங்கினார். இரண்டாம் பரிசை வென்ற கொடைக்கானலைச் சேர்ந்த லட்சுமி நாராயணனுக்கு ரொக்கப் பரிசு ரூ. 28 ஆயிரமும், பரிசு கோப்பையையும் சன் பில்டர்ஸ் நிறுவனர் டி.பி. ரவீந்திரன் வழங்கினார். மூன்றாம் பரிசை வென்ற சென்னையைச் சேர்ந்த ராம் எஸ். கிருஷ்ணனுக்கு ரூ. 25 ஆயிரம் ரொக்கமும், கோப்பையும் வழங்கப்பட்டது.
   தொடர்ந்து, 132 பேருக்கு ரொக்கப் பரிசும், 40 பேருக்கு கோப்பைகளும், 42 பேருக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
  முன்னதாக, இந்திய சதுரங்கப் பள்ளியைச் சேர்ந்த ஜான் ஜெபராஜ் வரவேற்றார்.
இப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை, திண்டுக்கல் இந்தியன் சதுரங்கப் பள்ளி மற்றும் கழகம், மௌன்ட் சதுரங்கப் பள்ளி மற்றும் கழகம், தமிழ்நாடு சதுரங்கக் கழகம் ஆகியன செய்திருந்தன. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com