கொடைக்கானலில் படகுப் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கொடைக்கானலில் படகுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, படகு குழாம் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

கொடைக்கானலில் படகுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, படகு குழாம் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
கொடைக்கானல் போட் மற்றும் ரோயிங் கிளப் சார்பில் 127-ஆவது ஆண்டு படகுப் போட்டி, வாத்து பிடிக்கும் இறுதிப் போட்டி மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
படகுப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விவரம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சீனிவாச முத்துக்கருப்பன் முதலிடமும், ஆதித்யா துரைராஜா இரண்டாமிடமும், கிருஷ்ணா மூன்றாமிடமும் பெற்றனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஆதித்யா துரைராஜா - தேவேந்திரன் முதலிடமும், சீனியர் கலப்பு இரட்டையர் பிரிவில் உத்ரா - சேக் அப்துல் முதலிடமும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் மிந்தமி முதலிடமும், ரேகா இரண்டாமிடமும், உமா மூன்றாமிடமும் பெற்றனர். பெண்கள் இரட்டையர் பிரிவில் மிந்தமி - பிரியா முதலிடமும், உமா - சிரின் இரண்டாமிடமும், ரம்யாராஜ் - உத்ரா பிரியதர்சன் மூன்றாமிடமும் பெற்றனர்.
   ஜூனியர் சிறுவர் ஒற்றையர் பிரிவில் நிதின் டேனியல் முதலிடமும், ஜூனியர் சிறுவர் இரட்டையர் பிரிவில் விஷால் மெல்வின் - நிதின் டேனியல் முதலிடமும்,ஜூனியர் சிறுமியர் ஒற்றையர் பிரிவில் லீனா பாத்திமா முதலிடமும், ஜூனியர் சிறுமியர் இரட்டையர் பிரிவில் லீனா பாத்திமா - அம்ரிதா முதலிடமும், ஜூனியர் கலப்பு இரட்டையர் பிரிவில் வள்ளியம்மை - நிதின் முதலிடமும் பெற்றனர்.
   25 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. போட்டிக்கு, சங்கத் தலைவர் ராமச்சந்திர துரைராஜா தலைமை வகித்தார். கௌரவச் செயலர் பவானி சங்கர் போட்டியை தொடக்கி வைத்தார். இதில், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து 175-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
போட்டியின் நடுவர்களாக, அமிதா சாட்டர்ஜி, லோகநாதன், மரியபால் சார்லஸ் ஆகியோர் செயல்பட்டனர்.
   பிற்பகலில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்து பரிசுகளை வழங்கி, வீரர்களை பாராட்டிப் பேசினார். இதில், சார்-ஆட்சியர் வினித், வருமான வரித் துறை அதிகாரி ரூபா, விஜிலென்ஸ் அதிகாரி சிவபிரசாத், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுகுணா ஜெகதீசன், படகு குழாம் சங்கத் தலைவர் ராமச்சந்திர துரைராஜா, நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். சங்க கௌரவச் செயலர் பவானி சங்கர் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com