ஆத்தூரில் 60 ஆண்டுகளுக்கு பின் ஜல்லிக்கட்டு: 40 பேர் காயம்

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பின்னர் ஜல்லிக்கட்டுப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றன.நீண்ட இடைவெளிக்குப்பிறகு ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பின்னர் ஜல்லிக்கட்டுப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றன.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு ஆத்தூரில் உள்ள காசி விசுவநாதர் திருக்கோயில், மசூதி மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து ஆத்தூர் வண்டிக்காளியம்மன் கோயில் அருகில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
முன்னதாக திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட 415 காளைகளை கால்நடைத்துறை இணை இயக்குநர் ஜெ.சாமுவேல் ஜெபராஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதித்தனர். அதில், 4 காளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 411 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை எதிர்கொண்டு பிடிப்பதற்காக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 446 மாடு பிடிவீரர்கள் களம் இறங்கினர். காளைகளைப் பிடிக்க முயன்ற 35 வீரர்களும், 5 பார்வையாளர்களும் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த 4 பேர், மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆத்தூரில் 60 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 4 பேர் உயிரிழந்ததால் ஜல்லிக்கட்டு நிறுத்திவைக்கப்பட்டிருந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com