கொடைக்கானலில் படகு அலங்காரப் போட்டி

கோடை விழாவையொட்டி கொடைக்கானல் ஏரியில் வெள்ளிக்கிழமை படகு அலங்காரப் போட்டி நடைபெற்றது.

கோடை விழாவையொட்டி கொடைக்கானல் ஏரியில் வெள்ளிக்கிழமை படகு அலங்காரப் போட்டி நடைபெற்றது.
 சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் கொடைக்கானல் நகராட்சி, கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், தோட்டக்கலைத் துறை, சுற்றுலாத் துறை, மீன் வளத்துறை சார்பில் அலங்காரம் செய்யப்பட்ட படகுகள் அணிவகுத்து வந்தன.
 போட்டியில் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் சார்பில் தனிநபர் கழிப்பறை, சுற்றுப்புறச் சுழல் சுத்தம், பசுமை வீடு ஆகியவைக் குறித்து வடிவமைக்கப்பட்ட அலங்காரப் படகு முதல் பரிசு பெற்றது. அதே போல் தோட்டக்கலைத் துறை சார்பில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மயில் படகுக்கு இரண்டாம் பரிசும், மீன் வளத்துறை சார்பில் வடிவமைக்கப்பட்ட மீன் படகுக்கு மூன்றாம் பரிசும் கிடைத்தது. வெற்றி பெற்றத் துறையினருக்கு கோடை பண்பலை துணை இயக்குநர் பழஅதியமான் பரிசுகளை வழங்கினார். சுற்றுலா அலுவலர் உமாதேவி நன்றி கூறினார்.
 இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் நகராட்சி ஆணையர் சரவணன், கொடைக்கானல்
ரோயிங் மற்றும் படகு குழாம் சங்கத் தலைவர் பவானி சங்கர், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மகேந்திரன், உதவி சுற்றுலா அலுவலர் சதீஷ், படகு குழாம் மேலாளர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மினிமாரத்தான் போட்டிகள்: கோடை விழாவையொட்டி சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலகம் சார்பில் மினிமாரத்தான் போட்டி நடைபெற்றது. கொடைக்கானல் ஏரியைச் சுற்றி ஆண்களுக்கு 10 கி.மீ தூரத்துக்கும், பெண்களுக்கு 5 கி.மீ. தூரத்துக்கும் இப்போட்டி நடைபெற்றது.
இதில் கொடைக்கானல், தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, கோவை, பொள்ளாச்சியைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளை கொடைக்கானல் டி.எஸ்.பி. செல்வம் தொடக்கி வைத்தார்.
 ஆண்களுக்கான போட்டியில் முதலிடம் பெற்ற பொள்ளாச்சியைச் சேர்ந்த ராஜாவுக்கு ரொக்கப் பரிசாக ரூ. 2 ஆயிரமும், இரண்டாமிடம் பெற்ற திண்டுக்கல்லைச் சேர்ந்த விஷ்ணுவுக்கு ரூ.1,500-ம், மூன்றாமிடம் பெற்ற கொடைக்கானலைச் சேர்ந்த களஞ்சியத்துக்கு ரூ.1000-மும் வழங்கப்பட்டது.
 அதே போல் பெண்களுக்கான போட்டியில் முதலிடம் பெற்ற திருச்சியைச் சேர்ந்த தமிழ் இனியாவுக்கு ரூ.2 ஆயிரமும், இரண்டாமிடம் பெற்ற தேஜாஸ்மினிக்கு ரூ.1,500-ம், மூன்றாமிடம் பெற்ற நந்தினிக்கு ரூ.1000-மும் வழங்கப்பட்டது. இவர்களுக்கு கொடைக்கானல் டி.எஸ்.பி. செல்வம் ரொக்கப் பரிசுகளை வழங்கினார். இதில் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் சௌந்திரராஜன், காவல் ஆய்வாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com