இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்

பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை பழனி சார்பு நீதிமன்றம் மற்றும் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை பழனி சார்பு நீதிமன்றம் மற்றும் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு பள்ளித் தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர் ராமர் வரவேற்றார். பொது இடங்களில் பொதுமக்களுக்கான சட்ட விதிகள், வாகனங்களில் பயணிக்கும் போது கையில் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள், வழக்குகளில் வாதாட இலவச சட்ட உதவிகள் மற்றும் அதற்கான பயனாளிகள் தேர்வு குறித்து வழக்குரைஞர் செல்லத்துரை விளக்கினார். அப்போது மாணவர்களின் சந்தேகங்களுக்கும் தீர்வுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் சிவக்குமார், சேரன் செங்குட்டுவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com