பழனி தெருக்களில் சுற்றித் திரியும் கழுதைகளை பராமரிக்க கோரிக்கை

பழனி தெருக்களில் சுற்றித் திரியும் கழுதைகளை பராமரிக்க அவற்றின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழனி தெருக்களில் சுற்றித் திரியும் கழுதைகளை பராமரிக்க அவற்றின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனியில் நகரெங்கும் சாலைகளில் அனாதையாக விடப்படும் மாடுகள், குதிரைகள் மற்றும் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இந்நிலையில் பொதி சுமக்க பயன்படுத்தப்படும் கழுதைகளை அவற்றின் உரிமையாளர்கள் பராமரிக்காமல் விட்டு விடுவதால் அவை உணவுக்காக வீதிகளில் அலையத் தொடங்கியுள்ளன. குப்பைமேடுகளில் சுற்றித்திரியும் இவற்றை நாய்கள் துரத்துவதுடன், சாலைகளில் வீசப்படும் பாலித்தீன் பைகளை உணவாக உட்கொள்வதால் அவற்றின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பினர் (புளூ கிராஸ்) கழுதை வளர்ப்போரை அழைத்து அவற்றை பட்டியில் அடைத்து பராமரிக்க அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com