கொடைக்கானல் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா தொடக்கம்

கொடைக்கானல் அருகே சீனிவாசபுரம் பகுதியிலுள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 14 ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கியது.

கொடைக்கானல் அருகே சீனிவாசபுரம் பகுதியிலுள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 14 ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கியது.
முன்னதாக உகார்த்தே நகர்ப் பகுதியிலுள்ள அற்புத குழந்தை யேசு கோவிலிருந்து கொடியை ஊர்வலமாக கிறிஸ்துவ மக்கள் எடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் மதுரை நொபிலி மையச் செயலர் பாதிரியார் ஆனந்த் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. 
திருவிழாவானது தொடர்ந்து 8-நாள்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் சிறப்புத் திருப்பலி மற்றும் ஜெபவழிபாடு நிகழ்ச்சி நடைபெறும்.

பல லட்சம் ரூபாய் வாடகை பாக்கி: பெரியகுளம் வணிக வளாகத்தில் கடைகளுக்கு சீல் வைப்பு
பெரியகுளம், நவ. 13: பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் பல ஆண்டுகள் வாடகை செலுத்தாமல் இருந்த கடைகளுக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.
பெரியகுளம் நகராட்சி உட்பட்ட தென்கரை, வடகரை பகுதியில்  பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் 110-க்கு மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு தனியாருக்கு வாடைக்கு விடப்பட்டுள்ளது. இவ்வாறு விடப்பட்டுள்ள கடைகள் மாதம் அடிப்படையில் வாடகை வசூலிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 
70-க்கும் மேற்பட்ட கடைகள் 4 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை செலுத்தவில்லையாம். இதனால் பல லட்சம் ரூபாய் வீணாகிவருகிறது. 
இது குறித்து நகராட்சி மூலம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வாடகை செலுத்துவதில்லை எனக் கூறப்படுகிறது. 
இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் மாணிக்க அரசி தலைமையில் 4 ஆண்டுகளுக்கு மேல் வாடகை செலுத்தாத 6 கடைகளுக்கு திங்கள்கிழமை சீல் வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com