அடங்கலில் பயிர், பதிவை சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தல்

கிராமக்கணக்கான அடங்கலில் சரியான பயிர் மற்றும் பரப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

கிராமக்கணக்கான அடங்கலில் சரியான பயிர் மற்றும் பரப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
ஒட்டன்சத்திரம் வட்டத்தில் உள்ள 57 வருவாய் கிராமங்களில் தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்து விவசாயப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் அனைத்து பயிர் வகைகளும் கிராமக் கணக்கான அடங்கலில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அரசுப்பணி மற்றும் பயிர் காப்பீடு போன்றவற்றிற்கு அடங்கல் மற்றும் கிராமக் கணக்குகளை சம்பந்தப்பட்ட கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் நேரில் சென்று பெற்றுக்கொள்ள விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் கிராமக்கணக்கான அடங்கலில் சரியான பயிர் மற்றும் பரப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் பொ.மாரிமுத்து அறிவுறுத்தியுள்ளார். ஒட்டன்சத்திரம் வட்டத்திற்குட்பட்ட நீர் நிலை மற்றும் அரசு புறம்போக்கில் உள்ள மணல், கற்களை அரசு அனுமதியின்றி எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com