கொடைக்கானல் ஹிந்துஸ்தான் பாதரச தொழிற்சாலையில் அதிகாரிகள் ஆய்வு

கொடைக்கானலிலுள்ள மூடப்பட்ட ஹிந்துஸ்தான் பாதரச தெர்மா மீட்டர் தயாரிப்பு தொழிற்சாலையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மண்டல அலுவலர் மற்றும் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினர்.

கொடைக்கானலிலுள்ள மூடப்பட்ட ஹிந்துஸ்தான் பாதரச தெர்மா மீட்டர் தயாரிப்பு தொழிற்சாலையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மண்டல அலுவலர் மற்றும் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினர்.
கொடைக்கானல் செயின்ட் மேரீஸ் சாலையில் கடந்த 1984-ஆம் ஆண்டு பாதரச தெர்மா மீட்டர் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். பல்வேறு பிரச்னைகளால் கடந்த 2001-ஆம் ஆண்டு இத் தொழிற்சாலை மூடப்பட்டது.
தமிழ்நாடு பாதரச எதிர்ப்பு கூட்டணியின் சார்பில், தொழிற்சாலையில் உள்ள பாதரசக் கழிவுகளையும், கொடைக்கானல் பகுதி நீர்நிலைகளில் உள்ள பாதரசக் கழிவுகளையும் அகற்ற வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
இந் நிலையில், ஹைதராபாத் ஐ.ஐ.டி. நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் ஆஷிப் குரோஷி மேற்கொண்ட ஆய்வில், கொடைக்கானல் ஏரி மீன்களிலும், கொடைக்கானல் தெர்மா மீட்டர் தொழிற்சாலை அருகே செல்லும் பாம்பாறு ஆற்றின் நீரைப் பெறும் பெரியகுளம் கண்மாய் மீன்களிலும், தேனி  மாவட்டப்  பகுதிகளிலுள்ள நீர்நிலைகளில் அதிக அளவு பாதரசம் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல அலுவலர் சார்லஸ், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் மோகன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் ஹிந்துஸ்தான் பாதரச தெர்மா மீட்டர் தொழிற்சாலைக்கு செவ்வாய்க்கிழமை சென்று  சுமார் 2 மணி நேரம்  ஆய்வு நடத்தினர். அங்குள்ள மண் மற்றும் செடிகளையும் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் பாதரச தொழிற்சாலை நிர்வாக அதிகாரிகள், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.
இது குறித்து கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் மோகன் கூறுகையில், இத் தொழிற்சாலையில் பாதரசக் கழிவுகளை அகற்றும் பணி குறித்து ஆய்வு நடத்தினோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com