11 வாகன திருட்டு வழக்குகளில் 13 வாகனங்கள் மீட்பு: எஸ்பி

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 40 நாள்களில் பதிவான 18 வாகன திருட்டு வழக்குகளில் 11 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 13 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக எஸ்பி இரா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 40 நாள்களில் பதிவான 18 வாகன திருட்டு வழக்குகளில் 11 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 13 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக எஸ்பி இரா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவர்,  ஆய்வுக்குப் பின் தெரிவித்ததாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த செப்.1 முதல் அக்.10ஆம் தேதி வரையிலும் 18 வாகன திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதுகுறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், 11 வழக்குளில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். 1 லாரி, 3 கார்கள், 1 ஆட்டோ, 8 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கொடைக்கானல் மற்றும் பழனியில் திருடப்பட்ட 3 கார்களும், கண்காணிப்பு கேமிரா உதவியுடன் கண்டறியப்பட்டன. குற்றத் தடுப்பு நடவடிக்கைகளிலும், வாகன விபத்துகளை தவிர்ப்பதிலும் போலீஸார் தொடர்ந்து தீவிரமாக செயல்பட வேண்டும் என்றார்.
முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் கூடுதல் துணைக் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், சார்பு- ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள், 6 சிறப்பு ஆய்வாளர்கள் மற்றும் 27 போலீஸார் என மொத்தம் 36 பேருக்கு பண வெகுமதி வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com