வாகன நிறுத்துமிடமாக மாறிய நத்தம் விரிவாக்க பேருந்து நிலையம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் ரூ.4.50 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் ரூ.4.50 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராததால், அது வாகன நிறுத்துமிடமாக மாறி வருகிறது.
 நத்தத்தில் ரூ.4.50 கோடி செலவில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்றன. ஏற்கெனவே பேருந்து நிலையம் செயல்பட்டு வந்த பகுதி சிறிதாக இருப்பதாகக் கூறி, வனத்துறைக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் நிலம் பேருந்து நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்டது.
விரிவாக்கம் செய்யப்பட்ட பேருந்து நிலையத்தில், தரைத்தளம் மற்றும்  முதல் தளம் என மொத்தம் 58 கடைகள் கட்டப்பட்டுள்ளன.  இந்த பேருந்து நிலையம், கடந்த 3 மாதங்களுக்கு முன் தமிழக முதல்வரால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை இப்பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரவில்லை. பேருந்து நிலையத்தின் புதிய தளத்திற்குள் பேருந்துகள் வராததால், பெரும்பாலான கடைகளும் திறக்கப்படாமலேயே உள்ளன.
அதேபோல், ரூ.4.50 கோடி செலவு செய்தும் பயணிகள் அமருவதற்காகன இருக்கை வசதி செய்து கொடுக்கப்பட வில்லை. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள், தரையில் அமர வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து கடைகளை ஏலம் எடுத்தவர்கள் கூறியதாவது: பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டும் பயனில்லாத நிலை உள்ளது. இங்கு 58 கடைகளை கட்டி பேரூராட்சிக்கான வருமானத்தை மட்டுமே அதிகரித்து கொண்டனர். ஆனால், ஏலம் எடுத்தவர்களின் நிலை மோசமாக உள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிக்கு பேருந்துகள் ஏன் வருவதில்லை என ஓட்டுநர்களிடம் கேட்டால், கழிப்பறை வசதி இல்லை எனக் கூறுகின்றனர். மொத்தமுள்ள 58  கடைகளில் 10 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 48 கடைகள் 3 மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளன.
தற்போது பேருந்துகள் வராததால், இருசக்கர வாகனம், கார், குப்பை அள்ளும் பேரூராட்சி டிராக்டர் போன்றவை நிறுத்துமிடமாக பேருந்து நிலையம் மாறி வருகிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com