கொடைக்கானலில் கூடுதல் நேரம் மின் தடை: பொதுமக்கள் அவதி

கொடைக்கானலில் வியாழக்கிழமை கூடுதல் நேரம் ஏற்பட்ட மின் தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

கொடைக்கானலில் வியாழக்கிழமை கூடுதல் நேரம் ஏற்பட்ட மின் தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
 கொடைக்கானலில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என  மின் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் அறிவிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக சுமார் 2 மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பொதுவாக கொடைக்கானலில் தினமும் 3 மணி நேரம் மின்தடை ஏற்படும் நிலையில், அறிவிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் மின் தடை ஏற்படுவதால் தங்களின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே மின் துறை அதிகாரிகள் மலைப் பகுதிகளில் பொதுமக்கள் பாதிக்காதவாறு மின் விநியோகம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானலில் காற்றுடன் பலத்த மழை: இதனிடையே வியாழக்கிழமை கொடைக்கானலில் காலை முதல் மேகமூட்டம் நிலவியது. மாலையில் திடீரென காற்றுடன் பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பிரகாசபுரம்- செண்பகனூர் சாலையில் மழைநீர் செல்ல வழியில்லாமல் குளம் போல தேங்கியுள்ளது. மேலும் இப்பகுதிகளில் கழிவுநீர் செல்ல வாய்க்கால் இல்லாததால் கழிவுநீரும் கலந்துள்ளது.  இதனால் சுகாதாரக் கேடு  ஏற்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல இடங்களில் தண்ணீர் செல்லும் வழியை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். சில இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது நகராட்சியில் நிதி பற்றாக்குறை இருப்பதால் பணிகள் நடைபெற முடியாத சூழ்நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் இங்கு நடைபெற உள்ள பணிகள் குறித்தும், அதற்குத் தேவையான நிதி குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி கிடைத்தவுடன் சாலைகள், சிறிய பாலங்கள் அமைக்கும் பணி நடைபெறும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com