திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம் திண்டுக்கல் மாவட்டத்தில் 9 இடங்களில் சனிக்கிழமை (அக். 14) நடைபெறுகிறது.

பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம் திண்டுக்கல் மாவட்டத்தில் 9 இடங்களில் சனிக்கிழமை (அக். 14) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்த முகாமில்,  அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்து, தீர்வு பெறலாம். திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் தவசிமடை கிராமத்தில் நடைபெறுகிறது. அதேபோல் புளியராஜக்காபட்டி (திண்டுக்கல் மேற்கு), பாளையங்கோட்டை (ஆத்தூர்), குன்னுவாரன்கோட்டை (நிலக்கோட்டை), வேலம்பட்டி (நத்தம்),  தங்கச்சியம்மாபட்டி (ஒட்டன்சத்திரம்), நெய்க்காரப்பட்டி (பழனி), செண்பகனூர் (கொடைக்கானல்), கொம்பேறிபட்டி (வேடசந்தூர்) ஆகிய இடங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com