திண்டுக்கல் ரயில்வே மேம்பாலப் பணி: டிசம்பரில் திறக்க ஏற்பாடு

திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் ரூ.21 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலத்தை டிச.9ஆம் தேதி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி

திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் ரூ.21 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலத்தை டிச.9ஆம் தேதி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைக்கும் வகையில் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
    திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில், எம்விஎம் கல்லூரி அருகே அமைந்துள்ள பழனி ரயில்வே கடவுப் பாதையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அடுத்து, நெடுஞ்சாலைத்துறை மூலம் 634 மீட்டர் நீளத்திற்கு பாலம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.  
அதன்படி, மேம்பாலம் அமைப்பதற்கான ஒப்புதல், மாநில அரசு மற்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. கடந்த 2016 ஜனவரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின.
 634 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படும் மேம்பாலத்திற்கு, இருபுறங்களிலும் 5.50 மீட்டர் அகலத்திற்கு அணுகு சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை மூலம் 21 தூண்கள்(கார்டர்கள்) அமைக்கப்பட்டு  கட்டுமானப் பணிகள் 14 மாதங்களுக்கு முன்னதாக முடிவடைந்துவிட்டது.
ஆனால், ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் கட்டுமானப் பணிகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதால், நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகளும் முடங்கின.
 இந்நிலையில் ரயில்வே கடவுப் பாதையின் மேல் பாலம் கட்டுமானப் பணிகள் கடந்த 10 நாள்களுக்கு முன்னதாக தொடங்கின.
தற்போது அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல்லில் டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வருகிறார். அப்போது முதல்வர் மூலம் பாலத்தை  திறந்து வைக்கும் வகையில் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com