ஆத்தூர் பகுதியில் தூர்வாரப்பட்ட குளங்களை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் சொந்த செலவில் தூர்வாரப்பட்ட குளங்களை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை பார்வையிட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் சொந்த செலவில் தூர்வாரப்பட்ட குளங்களை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை பார்வையிட்டார்.
ஆத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கருங்குளம், நடுக்குளம் (பகடைக்குளம்) செம்பட்டி அடுத்துள்ள புல்வெட்டி குளம் ஆகியவற்றின் மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன. இதில், கருங்குளம், கடந்த 100 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. இதனை அடுத்து, ஆத்தூர் பட்டாதாரர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் இந்த குளங்களை தூர்வார வேண்டும் என ஆத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமியிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, 3 குளங்களையும் தனது சொந்த செலவில் தூர்வாரிக் கொடுக்க ஐ.பெரியசாமி ஒப்புதல் அளித்தார். அதன் பயனாக கடந்த 2 மாதங்களுக்கு முன் தொடங்கிய தூர்வாரும் பணிகள் தற்போது முடிவடைந்து விட்டன. இந்நிலையில், திண்டுக்கல்லில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்க வந்துள்ள அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தூர்வாரப்பட்ட குளங்களை சனிக்கிழமை பார்வையிட்டார்.
அப்போது குளத்தின் தற்போதைய தோற்றத்தையும், தூர்வாரும் முன்பு இருந்த நிலை குறித்தும் ஐ.பெரியசாமி புகைப்படங்களுடன் விளக்கினார். அப்போது திமுக முதன்மை செயலர் துரைமுருகன், கொள்கை பரப்புச் செயலர் ஆ.ராசா, மாவட்டச் செயலர்கள் அர.சக்கரபாணி, பெ.செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com