பழனியாண்டவர் மகளிர் கல்லூரி கபடி அணி 15ஆவது முறையாக வெற்றி

பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளுக்கு இடையேயான கபடிப் போட்டியில் பழனியாண்டவர் மகளிர் கல்லூரி 15ஆவது ஆண்டாக வெற்றியை தட்டிச்

பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளுக்கு இடையேயான கபடிப் போட்டியில் பழனியாண்டவர் மகளிர் கல்லூரி 15ஆவது ஆண்டாக வெற்றியை தட்டிச் சென்றது.
பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகங்களுக்கு கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு இடையேயான கபடிப் போட்டி வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
இப்போட்டிகளில் அன்னை தெரசா பல்கலைக் கழகம், கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரி, நிலக்கோட்டை அரசு கலைக்கல்லூரி, திண்டுக்கல் செயின்ட் ஆன்டனி கல்லூரி, ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கல்லூரி, பெரியகுளம் திரவியம் கல்லூரி, பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, திண்டுக்கல் எம்விஎம் கல்லூரி உள்ளிட்ட 8 கல்லூரிகள் போட்டிகளில் பங்கேற்றன.
போட்டியை விலங்கியல்துறைத் தலைவர் மல்லிகா, பேரவை துணைத் தலைவர் மஞ்சுளா ஆகியோர் தொடக்கி வைத்தனர். உடற்கல்வி இயக்குநர் கலையரசி வரவேற்றார். சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியும், ஒட்டன்சத்திரம் சக்தி கல்லூரியும் மோதின. இதில் 48-க்கு 24 என்ற புள்ளிக் கணக்கில் பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக 15ஆவது ஆண்டாக கபடி போட்டியில் பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி வெற்றி பெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com