அருந்ததியர் உள் இடஒதுக்கீடு கோரி பொதுக்கூட்டம்

அருந்ததியர் 6 சதவீதம் உள் இடஒதுக்கீடு கோரி, பழனியில் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

அருந்ததியர் 6 சதவீதம் உள் இடஒதுக்கீடு கோரி, பழனியில் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.
தமிழர் விடுதலை முன்னணி சார்பில், பெரியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்துக்கு, தமிழர் விடுதலை முன்னணி மாநிலத் தலைவர் பழனி சிவா தலைமை வகித்தார்.  மாதிகா ரிசர்வேஷன் சங்க மாநிலத் தலைவர் பெருமாள் பத்திரன், தேசிய சமூக கூட்டமைப்பு தலைவர் ஆறுமுகம், லோகேஷ், கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.  மாதிகா ரிசர்வேஷன் சங்க தேசிய தலைவர் மந்தகிருஷ்ணாமாதிகா சிறப்புரை நிகழ்த்தினார். முன்னதாக, மாவட்டச் செயலர் ராஜா வரவேற்புரை வழங்கினார்.
கூட்டத்தில், தமிழகத்தில் அருந்ததியின மக்களுக்கு 7 சதவீதம் இடஒதுக்கீடு வர வேண்டும். அம்பேத்கர் பிறந்த மகாராஷ்டிர மாநிலத்தில் அருந்ததியினருக்கு உள்ள ஒரு சதவீத இட ஒதுக்கீடு 14 சதவீதமாக உயர்த்த வேண்டும். நாடு முழுவதும் உள்ள அருந்ததியினருக்கு இடஒதுக்கீடு கிடைக்காவிட்டால் மத்திய அரசு ஒப்புதல் பெற்று அதைச் சட்டமாக இயற்றப் பாடுபடவேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களை மீட்க வேண்டும்.  நவம்பர் மாதம் 7 ஆம் தேதி இடஒதுக்கீட்டுக்காக நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பழனியில் உள்ள அருந்ததியின மக்களுக்கு சொந்தமாக காரமடையில் உள்ள 1.20 ஏக்கர் நிலத்தை மீட்கவும், பல்லடத்தில் செப்டம்பர் 22 ஆம் தேதி செயற்குழு கூட்டுவது என்றும், கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.  வழக்குரைஞர் சண்முகம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com