"எதிர்காலம் தெரியாமல் இருப்பதே வாழ்க்கைக்கு மகிழ்ச்சி'

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என தெரியாமல் இருப்பதே மனித வாழ்க்கைக்கு மகிழ்ச்சி அளிக்கும் என தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் செயலர் ஆனந்தகுமார் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என தெரியாமல் இருப்பதே மனித வாழ்க்கைக்கு மகிழ்ச்சி அளிக்கும் என தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் செயலர் ஆனந்தகுமார் தெரிவித்தார்.
  திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அடுத்துள்ள கணவாய்பட்டி ஃபஸ்ட் ஸ்டெப் பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் தங்கமுத்து தலைமை வகித்தார்.
 செயலர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழக அரசின் நிதித் துறை கூடுதல் செயலர் ஆனந்தகுமார் கலந்து கொண்டு, கலைப் போட்டிகளில் பெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். முன்னதாக அவர் பேசியதாவது: எதிர்காலத்தில் என்ன நடைபெறப் போகிறது என்பதை தெரியாமல் இருப்பதே மனித வாழ்க்கைக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எந்த நிலையிலும் நம்பிக்கை இழக்காமல் முயற்சித்தாலே, அனைத்து செயல்களும் வெற்றி பெறும் என்றார்.
  அதனைத் தொடர்ந்து, பாரதியாரின் பாடல்களை ராகத்தோடு நிதித் துறை கூடுதல் செயலர் ஆனந்தகுமார், பாடினார்.   விழாவில் பள்ளி முதல்வர் கயல்விழி, இந்திய கபடி அணி பயிற்சியாளர் பாஸ்கரன், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் லூசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com