கொடைக்கானலில் நிலவும் பனிப் பொழிவால் பூண்டு பயிரில் நுனிகருகல் நோய்

கொடைக்கானலில் தொடர்ந்து நிலவும் பனிப் பொழிவால் வெள்ளைப் பூண்டு பயிரில் நுனிகருகல் நோய் ஏற்படுவதால், விவசாயிகள் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

கொடைக்கானலில் தொடர்ந்து நிலவும் பனிப் பொழிவால் வெள்ளைப் பூண்டு பயிரில் நுனிகருகல் நோய் ஏற்படுவதால், விவசாயிகள் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
    கொடைக்கானலில் பூம்பாறை, மன்னவனூர், வில்பட்டி, பள்ளங்கி, கிளாவரை, பூண்டி, கூக்கால், பழம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைப் பூண்டு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, பூண்டு பயிரில்நுனிகருகல் நோய் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.     இது குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியது: கொடைக்கானல் மலைக் கிராமங்களில் தற்போது அதிகமான பனிப் பொழிவு நிலவுவதால், பூண்டு பயிரில் நுனிகருகல் நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் பூச்சி தாக்குதலும் ஏற்படும். பனியின் பாதிப்பை தடுக்க அதிகாலை நேரங்களில் தெளிப்பு நீர் பாசனம் மூலம் தண்ணீர் தெளிக்கவேண்டும்.
    அதைத் தொடர்ந்து, அமிஸ்டர் அல்லது கஸ்டோடியா மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் 1-மில்லி வீதம் கலந்து கைதெளிப்பான் மூலம் அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில் 2-மில்லி வீதம் கலந்து விசை தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
    போலியார் கோல்டு மருந்தினை 1-லிட்டர் தண்ணீரில் 1.5 மில்லி வீதம் கலந்து கைதெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். மேலும், மருந்துடன் 1-லிட்டர் தண்ணீருக்கு 1-மில்லி ஒட்டு பசை கலந்து இலைகளில் நன்கு தெளிக்கவேண்டும். இவ்வாறு இருமுறை 12 நாள்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். விவசாயிகள் இவ்வாறு செய்தால், பூண்டு பயிரில் ஏற்படும் நுனிகருகல் நோயை கட்டுப்படுத்தலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com