உச்சத்தில் மல்லிகைப் பூ விலை: நிலக்கோட்டை சந்தையில் கிலோ ரூ.2 ஆயிரம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூச்சந்தையில் வெள்ளிக்கிழமை கிலோ மல்லிகைப் பூ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூச்சந்தையில் வெள்ளிக்கிழமை கிலோ மல்லிகைப் பூ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
நிலக்கோட்டை மற்றும் திண்டுக்கல் பூச்சந்தைகளிலிருந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்துக்கும் நாள்தோறும் பூக்கள் அனுப்பப்படுவது வழக்கம். கடந்த சில நாள்களாக அதிகரித்து வரும் பனிப் பொழிவின் காரணமாக மல்லிகை, முல்லை போன்ற பூக்களின் வரத்து குறைந்தது. இதனால், கிலோ ரூ.600 முதல் ரூ.800 வரை மல்லிகைப் பூ விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி, நிலக்கோட்டை மற்றும் திண்டுக்கல் பூச்சந்தையில் மல்லிகை, முல்லை, காக்கரட்டான் ஆகிய பூக்களின் விலை வெள்ளிக்கிழமை அதிகரித்தது. குறிப்பாக நிலக்கோட்டை சந்தையில் கிலோ மல்லிகை ரூ.2ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், முல்லை- ரூ.1200, காக்கரட்டான்- ரூ.1000, ஜாதிப் பூ- ரூ.1300, சம்பங்கி- ரூ.150 வீதம் விற்பனை செய்யப்பட்டன. திண்டுக்கல் பூச்சந்தையில், மல்லிகை ரூ.1500, ஜாதிப் பூ- ரூ.1,100, கலர் ஜாதிப் பூ- ரூ.900, காக்கரட்டான் - ரூ.800, சம்பங்கி- ரூ.140, செவ்வந்தி- ரூ.100, கோழிக்கொண்டை- ரூ.30 வீதம் விற்பனை செய்யப்பட்டன. இதனால், சிறு வியாபாரிகள் மல்லி, முல்லை, ஜாதிப் பூ உள்ளிட்டவற்றை வாங்குவதை தவிர்த்தனர்.
இதுகுறித்து பூ விவசாயி ஆர்.சந்திரசேகர் கூறியதாவது: மார்ச் மாதம் முதலே மல்லிகைப் பூ சீசன் தொடங்கும். தற்போது அதிக பனிப்  பொழிவு  இருப்பதால், மல்லிகை வரத்து மிகவும் குறைவாக உள்ளது. இதனால், அதிக வரத்துள்ள ஜாதிப் பூக்களுக்கும் நல்ல விலை கிடைத்துள்ளது.  நிலக்கோட்டை பகுதியில் பல தோட்டங்களில் கடந்த 20 நாள்களாக எடுப்பதற்கு பூக்கள் இல்லை. இதனாலேயே மல்லி, முல்லை ஆகிய பூக்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com