"கொடைக்கானலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்

கொடைக்கானலை சுத்தமாக வைத்திருக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென, தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு மற்றும் கூட்டு தூய்மைப் பணி முகாமில் சனிக்கிழமை பங்கேற்ற

கொடைக்கானலை சுத்தமாக வைத்திருக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென, தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு மற்றும் கூட்டு தூய்மைப் பணி முகாமில் சனிக்கிழமை பங்கேற்ற நடிகர் சசிக்குமார் வலியுறுத்தினார்.
கொடைக்கானல் நகராட்சி சார்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு, நகராட்சி ஆணையர் சரவணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், நடிகரும் இயக்குநருமான சசிக்குமார் கலந்து கொண்டு, நகராட்சி அருகே சிறுவர் பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், பூங்கா வளாகத்தில் ருத்ராட்ச மரக்கன்றை நட்டார்.
அதையடுத்து, நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் கூட்டு தூய்மைப் பணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில், நகரமைப்பு அலுவலர் முருகானந்தம், சுகாதார ஆய்வாளர் சுப்பையா, முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதர் மற்றும் கொடைக்கானல் குறிஞ்சி அரிமா சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இது குறித்து நடிகர் சசிக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். எனவே, நாம் கொடைக்கானலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இங்கு வசிக்கும் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளும் சுத்தமாக வைத்திருக்க உதவவேண்டும். சுத்தம் செய்யும் பணியாளர்களுக்கும் நாம் உதவவேண்டும். பிளாஸ்டிக் பொருள்களை உபயோகப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
தமிழகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம் 6-ஆவது இடத்தில் உள்ளது. முதலிடத்துக்கு கொண்டு வருவதற்கு நாம் அனைவரும் உதவிட வேண்டும். கொடைக்கானல் நகரத்தை தூய்மையாகவும், பசுமையாகவும் மாற்றுவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com