சாலை பராமரிப்புப் பணியை தனியாரிடம் ஒப்படைக்க சாலைப் பணியாளர்கள் எதிர்ப்பு

சாலை பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி சாலைப் பணியாளர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சாலை பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி சாலைப் பணியாளர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திண்டுக்கல் பிச்சாண்டி பில்டிங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட 6ஆவது மாநாட்டுக்கு மாவட்டத் தலைவர் டி.ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். 
மாநில பொருளாளர் இரா.தமிழ் சிறப்புரையாற்றினார். மாநில பொதுச் செயலர் மா.பாலசுப்பிரமணியன் நிறைவுரை ஆற்றினார். கூட்டத்தின் போது, சாலைப் பணியாளர்களின் பணிநீக்க காலமான 41 மாதங்களை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். பணிநீக்க காலத்தில் இறந்த சாலைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். சாலைப் பராமரிப்பு பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை  அரசு கைவிட வேண்டும். 
சாலைப் பணியாளர்களின் அடிப்படை ஊதியத்தை ரூ.1,300 லிருந்து ரூ.1,900 ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், மாவட்டச் செயலர் ஆர்.ராஜா, அனைத்து ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்எம்.ஜெயசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com