ஒட்டன்சத்திரம் பகுதியில் மாங்காய் விளைச்சல் அதிகரிப்பு: போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை

ஒட்டன்சத்திரம் பகுதியில் இந்த ஆண்டு மாங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

ஒட்டன்சத்திரம் பகுதியில் இந்த ஆண்டு மாங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
 ஒட்டன்சத்திரத்தை அடுத்த விருப்பாச்சி, வீரலப்பட்டி, சத்திரப்பட்டி, தாசரிபட்டி, புதுக்கோட்டை மற்றும் கேதையுறும்பு, மூலச்சத்திரம், போலியம்மனூர், நீலமலைக்கோட்டை,கன்னிவாடி, தருமத்துப்பட்டி உள்ளிட்ட பகுதியில் அதிக அளவு மாங்காய் பயிரிடப்பட்டுள்ளன. குறிப்பாக செந்தூரம், நீலம், நாட்டு மாங்காய், கல்லாமை என பல வகையான ரக மாங்காய்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்த ஆண்டு இப்பகுதியில் கோடை மழை நன்றாக பெய்ததால் மாங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. மாங்காய் வரத்து மே மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை இருக்கும். இப்பகுதியில் பறிக்கப்படும் மாங்காய்களை ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு விவசாயிகள் தினசரி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.    கடந்த ஆண்டு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்ற மாங்காய்கள், இந்த ஆண்டு அதைவிட குறைந்த விலைக்கு விற்பனையாகி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை சந்தையில் செந்தூரம் கிலோ ரூ.12, கல்லாமை ரூ.10, நீலம் ரூ.10, நாட்டு மாங்காய் ரூ.10-க்கு விற்பனையானது. இதனால் மாங்காய் பயிரிட்ட விவசாயிகள் போதிய விலை கிடைக்கவில்லை என கவலையடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com