காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு: தெருவில் வீணாக ஓடிய தண்ணீர்

எரியோடு அருகே காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் செவ்வாய்க்கிழமை உடைப்பு ஏற்பட்டதை அடுத்து, 2 மணி நேரமாக வெளியேறிய குடிநீர் சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

எரியோடு அருகே காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் செவ்வாய்க்கிழமை உடைப்பு ஏற்பட்டதை அடுத்து, 2 மணி நேரமாக வெளியேறிய குடிநீர் சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பாளையம், குஜிலியம்பாறை, எரியோடு வழியாக காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. காவிரி ஆற்றிலிருந்து ராட்சஷ குழாய்களில் எடுத்து வரப்படும் குடிநீர், திண்டுக்கல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது.  இந்நிலையில், எரியோடு அடுத்துள்ள கோவிலூர் திடீர் நகர் பகுதியில் பதிக்கப்பட்டுள்ள காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் செவ்வாய்க்கிழமை உடைப்பு ஏற்பட்டது. அதிலிருந்து வெளியேறிய குடிநீர், மழைநீர் போல் தெருவிலும், ஓடையிலும் பெருக்கெடுத்து ஓடியது.
இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய  அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  ஆனாலும்,  2  மணி நேரத்துக்குப் பின்னரே, குழாயில் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com