பழனி பங்குனி உத்திரத் திருவிழா ஏற்பாடுகள்: சுகாதாரம், குடிநீருக்கு முக்கியத்துவம் அளிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

பழனி பங்குனி உத்திரத் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதி போதிய அளவுக்கு ஏற்பாடு செய்து தர மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் அறிவுறுத்தினார்.

பழனி பங்குனி உத்திரத் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதி போதிய அளவுக்கு ஏற்பாடு செய்து தர மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் அறிவுறுத்தினார்.
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா  வரும் மார்ச் 24-ஆம் தேதி காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்று தங்கள் துறை சார்பில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து தெரிவித்தனர்.  
கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் பேசியது: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு வரும் பக்தர்களுக்கு போதிய குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகளை பேரூராட்சி, ஊராட்சி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். பழனிக்கு வரதமாநதி மற்றும் பாலாறு அணைகளில் இருந்து அவசர தேவைக்கு பொதுப்பணித்துறை சார்பில் தண்ணீர் திறப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். 
மின்சாரத்துறை விழா நாள்களில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்  பழனி நகரில் உணவு விடுதிகளில் விலைப்பட்டியலை கட்டாயம் வைக்க வேண்டும். அப்படி வைக்காவிட்டால் சம்பந்தப்பட்ட துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  
கிரிவீதி உள்ளிட்ட அடிவார பகுதிகளில் மானிய விலை எரிவாயு உருளைகள் பயன்படுத்தினால் பறிமுதல் செய்யவும் 24 மணி நேர தகவல் மையம் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவும், தைப்பூசத்தின் போது காவல்துறை மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகள், சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு  ஆகியவற்றை தொடரவும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.  மேலும், தேர் வரும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி மற்றும் தொலைதொடர்புத்துறை உள்ளிட்டவைகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. 
கூட்டத்தில்  கோயில் இணை ஆணையர் செல்வராஜ் வரவேற்றார். துணை ஆணையர்(பொறுப்பு) மேனகா, வட்டாட்சியர் ராஜேந்திரன், மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகர், உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், நகராட்சி பொறியாளர் சரவணன், உணவுப்பாதுகாப்பு அலுவலர் மோகனரங்கம், என ஏராளமானோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com