பிறப்பு, இறப்பு சான்றிதழ் கட்டணம் உயர்வு

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான காலதாமதக் கட்டணம் ரூ.100 முதல் ரூ.500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. 

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான காலதாமதக் கட்டணம் ரூ.100 முதல் ரூ.500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு தெரிவித்துள்ளது:  பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிறப்பு, இறப்பு தொடர்பான பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்கள் பெறுவதற்கான கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.     அதன்படி, பிறப்பு, இறப்பு பதிவு செய்ய (காலதாமதக் கட்டணம்) 21 முதல் 30 நாள்களுக்குள் ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 30 முதல் ஓராண்டு வரை ரூ.200 ஆகவும்,  ஓராண்டுக்கு மேலாக இருந்தால் ரூ.500ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
 மேலும், பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற (ஒவ்வொரு சான்றிதழுக்கும்)  ரூ.200, குழந்தைக்கு பெயர் வைக்க ஓராண்டுக்கு மேல் ரூ.200, தேடுதல் கட்டணம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.100, பதிவின்மை சான்று வழங்க ரூ.100 வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ரூ.2ஆக இருந்த கட்டணம் ரூ.100ஆகவும், ரூ.5ஆக இருந்த கட்டணம் ரூ.200ஆகவும், ரூ.10ஆக வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் ரூ.500ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com