கொடைக்கானல் மலைப்பகுதிகளில் 116 பேர்  முகாம்களில் தஞ்சம்

"கஜா' புயல்  காரணமாக, கொடைக்கானல் மலைப்பகுதியில் வீடுகளை இழந்த 116 பேர், காமனூர்  மற்றும் பேத்துப்பாறை

"கஜா' புயல்  காரணமாக, கொடைக்கானல் மலைப்பகுதியில் வீடுகளை இழந்த 116 பேர், காமனூர்  மற்றும் பேத்துப்பாறை  பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில்  வெள்ளிக்கிழமை தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
திண்டுக்கல்  மாவட்டத்தில்,  கொடைக்கானல் வட்டத்தின்  பெரும்பகுதி "கஜா' புயல்  காரணமாக  கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே கொடைக்கானல் அருகேயுள்ள காமனூர்  சுற்றுப்புறப் பகுதியில் வீடுகளை  இழந்துள்ள 18 குடும்பங்களைச் சேர்ந்த 21 ஆண்கள், 18 பெண்கள், 14 குழந்தைகள்  என மொத்தம்  53 பேர், காமனூரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
அதேபோல்,  கொடைக்கானலை  அடுத்துள்ள பேத்துப்பாறையில்  வீடுகளை  இழந்துள்ள  23 குடும்பங்களைச் சேர்ந்த  25 ஆண்கள், 28 பெண்கள் மற்றும் 10 குழந்தைகள் என 63 பேர், அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள  தற்காலிக  முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com