பிளாஸ்டிக் கழிவுப் பொருள்களை ஒப்படைத்தால் பரிசு: திண்டுக்கல் மாநகராட்சியில் புதிய திட்டம்

பிளாஸ்டிக் கழிவுப் பொருள்களை திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் நிறுவப்பட்டுள்ள 4 சேகரிப்பு மையங்களில்

பிளாஸ்டிக் கழிவுப் பொருள்களை திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் நிறுவப்பட்டுள்ள 4 சேகரிப்பு மையங்களில் ஒப்படைப்போருக்கு பரிசு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை தீவிரமாக அமல்படுத்த அந்தந்த பகுதியிலுள்ள உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், திண்டுக்கல் மாநகராட்சி சார்பில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை வெளியில் தூக்கி எறியாமல், வீடுகளிலேயே சேமித்து அதனை மாநகராட்சி சார்பில் நிறுப்பட்டுள்ள மையங்களில் ஒப்படைத்தால் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாநகராட்சி அலுவலகம், காமராஜர் பேருந்து நிலையம், குமரன் பூங்கா, நாகல்நகர் ரவுண்டானா ஆகிய 4 இடங்களில் சேகரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளன. 
இந்த மையங்களில் ஒப்படைக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுப் பொருள்களின் எடைக்கு ஏற்ப பரிசு வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ஆணையர் ந.மனோகரன், பிளாஸ்டிக் கழிவுப் பொருள்களை ஒப்படைத்த மாணவர்களுக்கு வியாழக்கிழமை பரிசு வழங்கினார்.
 அப்போது, மாநகர் நல அலுவலர் மோ.அனிதா, சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்: மேலும் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்குக் காய்ச்சல் தொடர்பாக விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்த விளக்கங்களுடன் கூடிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com