பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, கவிதைப் போட்டி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 4 கல்வி மாவட்டங்களிலும்இலக்கியக் களம் புத்தகத்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 4 கல்வி மாவட்டங்களிலும்இலக்கியக் களம் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு,மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, கவிதை மற்றும் பேச்சுப்போட்டிசனிக்கிழமை நடைபெற்றது. 
 திண்டுக்கல் மாவட்ட இலக்கியக் களம் சார்பில் வரும் நவம்பர் 29ஆம் தேதி முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரைஏழாவது புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள்நடைபெற்று வருகின்றன.
புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான கட்டுரை, கவிதை மற்றும் பேச்சுப்போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றபோட்டியை தலைமைஆசிரியர் ஜார்ஜ் தொடங்கிவைத்தார்.
காந்திகிராமம் பல்கலைக்கழக முனைவர் குருவம்மாள், இலக்கியக்களம் போட்டிகள் ஒருங்கிணைப்பாளர் கல்லூரி முதல்வர் சரவணன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். போட்டிகள் ஒருங்கிணைப்பாளர் முதல்வர் சரவணன் கூறியது:
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, திண்டுக்கல், வேடசந்தூர், வத்தலக்குண்டு ஆகியநான்கு கல்வி மாவட்டங்களிலும் ஆறாம் வகுப்பு முதல் கல்லூரியில்பயிலும்மாணவர்கள் வரை பேச்சு, கவிதை மற்றும் கட்டுரை போட்டிகள்சனிக்கிழமைநடத்தப்பட்டது. இதில், மொத்தம்சுமார் 1,700-க்கும் மேற்பட்ட மாணவர்கள்பங்கேற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகத்திருவிழாவின்போது பரிசுகள் வழங்கப்படும். சிறப்பிடம் பெறுவோர் இலக்கிய சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவர் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com