பழனியில் விநாயகர் சதுர்த்தி விழா: மலைக்கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

பழனி மலைக்கோயிலில் வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பழனி மலைக்கோயிலில் வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பழனி  தண்டாயுதபாணி சுவாமி கோயிலில்  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வியாழக்கிழமை மலைக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக குவிந்தனர்.  மலைக்கோயிலில் இலவச, கட்டண தரிசன வரிசைகளிலும்,  வின்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களிலும் கட்டண வரிசைகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.  மலைக்கோயில் முன்புறம் உள்ள ஆனந்த விநாயகருக்கு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து வெள்ளிக்கவசம் சார்த்தப்பட்டு பெரிய லட்டு, கொழுக்கட்டை வைக்கப்பட்டு மஹா தீபாராதனை நடத்தப்பட்டது.  மலைக்கோயில் முன் மண்டபத்தில் உள்ள நின்ற விநாயகருக்கும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது.   பழனி சண்முகபுரம் சித்தி விநாயகர் ஆலயத்தில் சித்தி விநாயகருக்கு பல்வேறு வகையான அபிஷேக பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு வெள்ளிக்கவசம், வெள்ளிக்கொழுக்கட்டை மாலை அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. 
 இந்திரா நகர் ராஜயோக கணபதி கோயில், அடிவாரம் பாதவிநாயகர் கோயில்,  பட்டத்து விநாயகர் கோயில்,  ரயிலடி விநாயகர் கோயில், நடேசர் சன்னதி  கோசலை விநாயகர் கோயில், சண்முகநதி ஆறுமுக விநாயகர் கோயில் உள்ளிட்ட  கோயில்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.  பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் யானை கஸ்தூரிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கோயிலின் உட்புறம் உள்ள விநாயகருக்கு யானை கஸ்தூரி வணங்கி மரியாதை செய்தது.  மாலையில் பட்டத்து விநாயகர் கோயிலில் இருந்து உற்சவர் விநாயகர் புறப்பாடும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com