சிறந்த குறிஞ்சி மலர் புகைப்படத்துக்கு பரிசு

கொடைக் கானலில் குறிஞ்சி மலர்களின் சிறந்த புகைப்படத்தை பதிவு செய்யும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் புகைப்பட ஆர்வலர்களுக்கு பரிசு வழங்கப்படும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.


கொடைக் கானலில் குறிஞ்சி மலர்களின் சிறந்த புகைப்படத்தை பதிவு செய்யும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் புகைப்பட ஆர்வலர்களுக்கு பரிசு வழங்கப்படும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித் துள்ளது:
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை குறிஞ்சி விழா கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கியது. இதனையொட்டி, குறிஞ்சி மலர்களை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் வகையில் கோக்கர்ஸ்வாக் பகுதியில் உள்ள குறிஞ்சி மலர் பூங்கா, பிரையண்ட் பூங்காவில் கோடை குறிஞ்சி புகைப்பட கண்காட்சியும் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், குறிஞ்சி மலர் நாள்காட்டி மற்றும் கோடை குறிஞ்சி மலர் அஞ்சல் வில்லைகளையும் வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் வெளியிட்டார்.
அதன் தொடர்ச்சியாக, கொடைக்கானலில் குறிஞ்சி மலர் கால நிலையினை பதிவு செய்யும் வகையில் சுற்றுலா பயணிகள், புகைப்பட ஆர்வலர்கள் கொடைக்கானல் மலைகளில் குறிஞ்சி மலர் என்ற தலைப்பில் தங்கள் புகைப்படங்களை (அமைவிடத்தின் பெயருடன்) தங்கள் பெயரு டன் முழு விலாசம் மற்றும் தொலை பேசி எண்ணுடன்  மின் அஞ்சல் முகவரிக்கு செப்.24ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க லாம்.
அதில் தேர்வு செய்யப்படும் சிறந்த புகைப்படத்திற்கு பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com