டிச.17 இல் மதுரையில் நெசவு சுற்றுலா சுங்குடிச் சேலை தறிக்கூடங்களை பார்வையிட ஏற்பாடு

தமிழகத்தின் பாரம்பரிய நெசவுக் கலையை இளம் தலைமுறை அறியும் வகையில் கோ ஆப்டெக்ஸ் நெசவு சுற்றுலா என்ற புதிய முயற்சியை கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்த உள்ளது.
டிச.17 இல் மதுரையில் நெசவு சுற்றுலா சுங்குடிச் சேலை தறிக்கூடங்களை பார்வையிட ஏற்பாடு

தமிழகத்தின் பாரம்பரிய நெசவுக் கலையை இளம் தலைமுறை அறியும் வகையில் கோ ஆப்டெக்ஸ் நெசவு சுற்றுலா என்ற புதிய முயற்சியை கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்த உள்ளது.
தமிழகத்தின் பாரம்பரிய நெசவுத் தொழிலை மேம்படுத்தவும், நெசவு பற்றி இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளவும் நெசவு சுற்றுலா என்ற திட்டத்தை கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்த உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் கூறியது:
மதுரையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெசவு செய்யப்படும் சுங்குடிச் சேலைகள் உலகப் புகழ் பெற்றவை. இது போன்ற பாரம்பரிய கைத்தறி துணிகள் குறித்து இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் நெசவு சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இதில், மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பகுதிகளில் சுங்குடிச் சேலைகள் உற்பத்தி செய்யப்படும் இடங்களுக்கு வாடிக்கையாளர்கள் அழைத்துச் செல்லப்படுவர். டிச.17 ஆம் தேதி நெசவு சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் டிச.10 ஆம் தேதிக்குள், கோஆப்டெக்ஸ் கைத்தறி குழும துணை மேலாளரிடம் 99655-57720 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.
இதுகுறித்து கோ ஆப்டெக்ஸ் அதிகாரிகள் கூறியது:
சென்னையில் இருந்து காஞ்சிபுரத்துக்கு பட்டுச் சேலைகள் உற்பத்தி செய்யப்படும் தறிக்கூடங்களுக்கு வாடிக்கையாளர்களை அழைத்துச் செல்லும் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் வரவேற்பைத் தொடர்ந்து மதுரையில் இத் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். காலை 8.30 மணிக்குத் தொடங்கி மாலை 5.30-க்கு முடியும் வகையில் நெசவு சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது. மதிய உணவு உள்பட சுற்றுலா கட்டணமாக ரூ.750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com