தாய்மொழிக் கல்வியே சிறந்தது: உ.சகாயம்

தாய்மொழி வழியாகப் படிப்பதே சிறப்பானது என ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் பேசினார்.

தாய்மொழி வழியாகப் படிப்பதே சிறப்பானது என ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் பேசினார்.
மேலூர் அருகே உள்ள கூலிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர், பல்வேறு போட்டிகளில் தேர்வுபெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி பேசியதாவது: உலகில் வல்லரசுகளாக முன்னேறிய பல்வேறு நாடுகள் தங்கள் கல்வியை தாய்மொழியில் தான் நடத்தி வருகின்றன.தாய்மொழி வழியில் படித்தாலே தரம்குறைவு என்ற எண்ணத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். அரசுப் பள்ளிகள் தான் அடுத்த தலைமுறைக்கு தமிழ்மொழியை எடுத்துச்செல்லும் களமாக உள்ளன. இன்றைய அரசுப்பள்ளி மாணவர்கள் நாளைய அரசு அதிகார மையத்தில் உயர்பதவிகளை அடைய வேண்டும். நேர்மையாக செயலாற்றவேண்டும். அதற்காகக் கனவு காணவேண்டும் என்றார்.
விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியை ரிஜ்வானாபேகம் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய உதவி திட்ட அலுவலர் ஏ.மீனாட்சி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எம்.முத்தையா, கூடுதல் உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் எஸ்.ஆரோக்கியராஜ், எஸ்.ஜெஸிந்தா அன்புமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராமக் கல்விக்குழுத் தலைவர் இரா.பாண்டி நன்றி கூறினார்.
'கிரானைட்: கடமை முடிந்தது'
கிரானைட் முறைகேடுகள் குறித்த மேல்நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு சகாயம் கூறியது: கிரானைட் முறைகேடுகளுக்கான ஆதாரங்கள், ஆவணங்கள் அனைத்தையும் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்துவிட்டேன். அதன்பேரில் மேல்நடவடிக்கை என்பதை நீதிமன்றமும் தமிழக அரசும் தான் எடுக்கவேண்டும். இதில் எனது கடமையை சரியாகச் செய்துள்ளேன் என்றார். மேலும், வறட்சி, வறுமை, பொருள் நஷ்டம் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்வது நாட்டுக்குப் பெரும் அவமானம். புதுதில்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் வெற்றிபெறவேண்டும். வேளாண் கல்வி, உயர் கல்வி கற்ற மாணவர்கள் விவசாயிகளது துயர் நீங்க உதவவேண்டும் என்றார் சகாயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com