நடப்பு ஆண்டில் 1 லட்சம் இளைஞர்களுக்கு திறன்மேம்பாடு பயிற்சி: அமைச்சர் தகவல்

நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்படுகிறது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்படுகிறது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
திருமங்கலத்தில் சனிக்கிழமை ஊரக வளர்ச்சித்துறை மற்றும் புதுவாழ்வுத் திட்டம் சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தலைமை வகித்து அவர் பேசியது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் நிறைய தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வந்துள்ளன. கிராமப்புற ஏழை மக்கள் பயன்படும் வகையில் 16-17 ஆம் ஆண்டிற்கு இது முன்னோடித்திட்டமாகும்.
ஒரு லட்சம் இளைஞர்களுக்கு நடப்பு ஆண்டில் திறன்மேம்பாடு, பன் மொழிப் பயிற்சி, புத்தாக்கப்பயிற்சி ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதற்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்காலத்தில் 1 கோடியே 49 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. அதிமுகவின் 2011-16ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் 2 கோடியே 18 லட்சம்பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது என்றார்.
நிகழ்ச்சியில் மதுரை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா முன்னிலை வகித்தார். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் சிறப்புரையாற்றினார்.
மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், கூடுதல் ஆட்சியர் ரோகிணிராம்தாஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திரபிதாரி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நீதிபதி (உசிலம்பட்டி), போஸ் (திருப்பரங்குன்றம்), பெரியபுள்ளான்(எ)செல்வம் (மேலூர்) வாழத்துரை வழங்கினர். தமிழகத்தின் பல பகுதியிலிருந்து 42 நிறுவனங்கள் கலந்துகொண்டன. 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் பங்கு பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com