சௌராஷ்டிரா தொழில் வர்த்தக கண்காட்சி தொடக்கம்

சௌராஷ்டிரா தொழில் வர்த்தக சங்கம் சார்பில் சிட்கான்-2017 என்ற தொழில் வர்த்தக கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சௌராஷ்டிரா தொழில் வர்த்தக சங்கம் சார்பில் சிட்கான்-2017 என்ற தொழில் வர்த்தக கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
 வி.எஸ்.செல்லம் சரஸ்வதி அரங்கத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தக் கண்காட்சி 13-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.  கண்காட்சியை மதுரை காந்தி என்எம்ஆர் சுப்புராமன் கல்லூரி நிறுவனர் எம்.கே.ஜவஹர் பாபு, பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தனர்.
 இதில் மொத்தம் 65 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா நிறுவனங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், கார் உதிரிபாகங்கள், கண்காணிப்பு காமிராக்கள், லாக்கர் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்டவை அரங்குகள் அமைத்துள்ளன. மூன்று நாள்களும் காலை 9.30 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் பார்வையிட்டு பொருள்களை வாங்கலாம். இதற்கு அனுமதி இலவசம் என்று கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் டி.கே.விஜய்பாபு கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com