தொழிலாளி கொலை வழக்கில் தேடப்பட்டவர் நீதிமன்றத்தில் சரண்

மதுரையில் முன்விரோதத் தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டவர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தார்.

மதுரையில் முன்விரோதத் தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டவர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தார்.
மதுரை ஆத்திகுளம் மகாலட்சுமி நகர் 5-ஆவது தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் முத்துக்கண்ணன்(27). இவர் கட்டடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்தது வந்தது. முத்துக்கண்ணன் மீது தல்லாகுளம் காவல்நிலையத்தில் கொலை முயற்சி உள்பட இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு ஆத்திகுளம் பகுதியில் நடந்து சென்ற முத்துக்கண்ணனை, இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் தேடிவந்தனர்.
இந்நிலையில் முத்துக்கண்ணன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த, மதுரை கோ.புதூர் ராமவர்மா நகரைச் சேர்ந்த லட்சுமணன்(18), மதுரை நீதித்துறை நடுவர் மன்றம்(எண் 2)இல் வெள்ளிக்கிழமை சரணடைந்தார். அவரை ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதித்துறை நடுவர் சக்திவேல் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, லட்சுமணன் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com