படிப்புக்கும் படைப்புக்கும் தொடர்பில்லை: எழுத்தாளர் கர்ணன்

படிப்புக்கும் நாம் உருவாக்கும் படைப்புகளுக்கும் தொடர்பில்லை என மணிக்கொடி எழுத்தாளர் கர்ணன் தெரிவித்தார்.

படிப்புக்கும் நாம் உருவாக்கும் படைப்புகளுக்கும் தொடர்பில்லை என மணிக்கொடி எழுத்தாளர் கர்ணன் தெரிவித்தார்.
பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற எழுத்தாளர் - மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் சிறுகதை நுட்பமும் அதன் அழகும் என்ற தலைப்பில் அவர் பேசியது : சிந்தனை தொடங்கும்போது எழுத்து வரும்.  எழுதும்போது  நல்லவற்றையும்,  தன்னம்பிக்கையை யும் வாசகர்கள் உள்ளங்களில் பதிக்க வேண்டும். 500 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிய நான் எந்த கதையிலும் எதிர்மறை சிந்தனைகளைச் சொல்லியது இல்லை. ஏமாற்றுதல், வஞ்சனை புரிதல், துரோகம் செய்தல் போன்றவை என்கதையில் இடம்பெறாது. நேர்மை, அன்பு, தியாகம் போன்றவற்றை கருவாக கொண்டுதான்  எனது கதை அமைந்திருக்கும். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த  நான் 5 குறுநாவல்கள், இந்திய சுதந்திர போராட்ட வரலாறு 7 தொகுதிகள் எழுதி வெளியிட்டுள்ளேன். நல்ல சிந்தனை இருந்தால் எழுத்து வரும். படிப்புக்கும் நாம் உருவாக்கும் படைப்புகளுக்கும் தொடர்பில்லை.  மாணவர்கள் கண்களுக்கு நல்ல விஷயங்கள் தென்பட வேண்டும். அவற்றை கற்பனை கலந்து கதையாக வடிக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எஸ்.நேரு தலைமை வகித்தார். செயலர் எம்.விஜயராகவன், உபதலைவர் எஸ்.ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முன்னதாக பேராசிரியர் காயத்ரிதேவி  வரவேற்றார். பேராசிரியர் தேவிபூமா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com