மேலூரில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

தேசிய வேளாண் சந்தைக்கான விவசாயிகள் கொண்ட உற்பத்தியாளர் குழுவை அமைப்பதுதொடர்பாக  விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் மேலூரில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

தேசிய வேளாண் சந்தைக்கான விவசாயிகள் கொண்ட உற்பத்தியாளர் குழுவை அமைப்பதுதொடர்பாக  விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் மேலூரில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
விவசாயிகள் தாங்கள்பயிரிட்ட  பயிர்களை அறுவடைசெய்து மகசூலை மேம்படுத்தி இடைத்தரகர்கள் இன்றி சந்தையில் நேரடியாக லாபகரமான விலையில் விற்பனை செய்வதற்கான தேசிய வேளாண் சந்தை அமைக்கப்படுகிறது.
இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மேலூரில் விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. வேளாண் மதுரை விற்பனைகுழு செயலர் காமராஜ் விளக்கம் அளித்தார்.
விவசாயிகள் தங்கள்பகுதியில் சிறுசிறுகுழுக்களை அமைத்து அக்குழுக்கள் அனைத்தையும் வேளாண் வணிகத்துறை மூலம் ஒருங்கிணைக்கவும், விவசாயிகள் நேரடியாக சந்தையில் ஈடுபடவும், தேவையான பயிற்சி சந்தை வாய்ப்புக்களை அறிதல் தொடர்பாகவும் வேளாண் வணிகத்துறை உதவிஇயக்குநர்  செ.அமலா விளக்கம் அளித்தார். மேலூர் உழவர்சந்தை வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமில்  முன்னோடி விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com