இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ.1.93 கோடியில் ஒருங்கிணைந்த அலுவலகம்: காணொலிக் காட்சியில் முதல்வர் திறந்து வைத்தார்

மதுரை எல்லீஸ் நகரில் இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ.1.93 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடத்தை

மதுரை எல்லீஸ் நகரில் இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ.1.93 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சென்னையில் இருந்து காணொலிக் காட்சியில் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
தரைதளம், முதல்தளம், இரண்டாவது தளத்தில் கால்வேணியம் தகடு கூரை என 14 ஆயிரத்து 684 சதுர அடியில் இந்து சமய அறநிலையத் துறை மதுரை இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் ஒருங்கிணைந்த அலுவலக வளாகம் கட்டப்பட்டுள்ளன.
தரை தளத்தில் உதவி ஆணையர் அறை, அலுவலகம், மண்டல தணிக்கை அலுவலர் அறை, தணிக்கை அலுவலகம், பொறியியல் பிரிவு, செயற்பொறியாளர் அறை உள்பட 9 அலுவலக அறைகள் உள்ளன. முதல் தளத்தில் இணை ஆணையர் அறை, இணைஆணையர் அலுவலகம், துணை ஆணையர் (நகைகள் சரிபார்ப்பு), மாவட்ட வருவாய் அலுவலர் (ஆலய நிலங்கள்) உள்பட 6 அலுவலக அறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சியில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைத்தார். தமிழக அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், சேவூர்.எஸ். ராமச்சந்திரன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், இந்து சமய அறநிலையத் துறை இணைஆணையர் பச்சையப்பன், மதுரை அண்ணா நகர் சர்வேஸ்வரர் கோயில் அறங்காவலர் ஏ.ஆர்.ராமசாமி, கீழவாசல் அரசமரம் பிள்ளையார் கோயில் அறங்காவலர் அமர்லால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அறங்காவலர்கள், இந்து சமய அறநிலையத் துறையின்அனைத்து அலுவலகங்களையும் ஒருங்கிணைத்து ஒரே வளாகத்தில் புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com