குடிநீர் விநியோகம் திடீர் நிறுத்தம்: மதுரையில் பொதுமக்கள் தவிப்பு

மதுரையில் நேதாஜி சாலை, கிளாஸ்காரத் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகளுக்கு திடீரென குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மதுரையில் நேதாஜி சாலை, கிளாஸ்காரத் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகளுக்கு திடீரென குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
    தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 29.43 அடியாக உள்ளதால், வரும் ஆகஸ்ட் வரை அங்கிருந்து மதுரைக்கான குடிநீரைப் பெறலாம் என்ற நிலை உள்ளது. ஆனாலும்,  மதுரையில் குடிநீர் விநியோகத்தில் குழாய் பொருத்துநர்கள் மற்றும் குடிநீர் திறந்து விடும் ஊழியர்கள் செயற்கையான குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
   நேதாஜி சாலை பகுதியில் உள்ள கிளாஸ்காரத் தெருவில் குடிநீர் இணைப்பு பெற்ற பெரும்பாலான வீடுகளுக்கு திடீரென சில நாள்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. அதே போல் கீரைத்துறை பகுதியிலும் குடிநீர் விநியோகிக்கப்பட வில்லை.
    இதனிடையே குடிநீர் இணைப்புப் பெற்றவர்களுக்கு தண்ணீர் விநியோகத்தை நிறுத்திய குழாய் பொருத்துநர்கள் மற்றும் குடிநீர் திறந்து விடும்  ஊழியர்கள்,  அதே பகுதியில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்க தனியாக பணம் கேட்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.  இதுகுறித்து மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
 புதிய இணைப்புகளுக்கு நேரடியாக விண்ணப்பிக்க கூறும் மாநகராட்சி நிர்வாகம், ஏற்கெனவே இணைப்புப் பெற்றும் குடிநீர் விநியோகமில்லாத பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, குறிப்பிட்ட பகுதிகளில் அழுத்தம் குறைவு காரணமாக குழாய்களில் குடிநீர் செல்வதில்லை.  இப்பிரச்னைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பணம் கொடுத்தால் குடிநீர் வரும் எனக் கூறுவோர் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம். புகாருக்கு உள்ளாகும் ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com