பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா

மதுரை மாவட்டத்தில் கல்லூரி, பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக காமராஜர் பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் கல்லூரி, பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக காமராஜர் பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
மதுரை  மாவட்டம் எழுமலை ஆண்கள், பெண்கள் அரசுப் பள்ளிகளில் நடந்த விழாவில் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் என். மாரிமுத்து சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் பள்ளி உள்கட்டமைப்பு குறித்தும் ஆய்வை மேற்கொண்டார். நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் ஆதிராமசுப்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
எஸ்.பி.ஓ.ஏ. பதின்ம மேல்நிலைப் பள்ளி: இப்பள்ளியில் நடந்த விழாவுக்கு பள்ளித் தாளாளர் ஜோசப் ஸ்டாலின் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் எஸ். சீதாலட்சுமி முன்னிலை வகித்தார்.  பேராசிரியர் கே.சரஸ்வதி சிறப்புரையாற்றினார். திருச்சி எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி நிர்வாகி தயாசியாமளா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அல்அமீன் பள்ளி:  மதுரை கோ.புதூர் அல் அமீன் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழாவுக்கு பள்ளித் தாளாளர் முகமது இதிரிஸ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஷேக்நபி முன்னிலை வகித்து, காமராஜரும், கல்வியும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  பேச்சு,  கட்டுரை, ஓவியப் போட்டிகளில் பங்கேற்று வென்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. இலக்கிய மன்றச் செயலர் நூருல்லாஹ் வரவேற்றார். ஆசிரியர்கள் ஜெய்லானி, தெளஃபிக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.   
புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி:  இங்கு காமராஜர் பிறந்த நாளையொட்டி நடந்த கல்வி வளர்ச்சி நாள் விழாவுக்கு பள்ளி கூடுதல் தலைமை ஆசிரியர் தே.மரியஅருள்செல்வம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் லூயிஸ் அமல்ராஜ்  முன்னிலை வகித்தார். பாரதி தேசியப் பேரவைத் தலைவர் க.ஜான்மோசஸ் சிறப்புரையாற்றினார்.  ஜோ.ஸ்டான்லி விக்டர் கவிதை வாசித்தார். தமிழாசிரியர் ஆ.மைக்கேல்மாறன் வரவேற்றார்.  சூ.மா.தாமஸ் ஆண்டனி நன்றி கூறினார்.
 புனித சூசையப்பர் பள்ளி: சமயநல்லூர் பகுதியில் உள்ள புனித சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில் நடந்த கல்வி வளர்ச்சி நாள் விழாவுக்கு பள்ளித் தாளாளர் எட்வர்ட் பிரான்சிஸ் தலைமை வகித்தார்.  பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் சிறப்புரையாற்றினார்.  பள்ளித் தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரசுப் பள்ளி: வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவுக்கு உதவித் தலைமை ஆசிரியர் விஜயரெங்கன் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் உமர்பரூக், அக்ரிசுரேஷ்  முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ், நிர்மலா,  சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காந்திஜி ஆரம்பப்பள்ளி: பொட்டுலுபட்டியில் உள்ள காந்திஜி  ஆரம்பப் பள்ளியில் நடந்த விழாவுக்கு பள்ளிச் செயலர் நாகேஸ்வரன் தலைமை வகித்தார்.  பள்ளிக் குழுத் தலைவர் தனபால் முன்னிலை வகித்தார்.  தலைமை ஆசிரியர் வெங்கடலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆதிதிராவிடர் பள்ளி: இளமனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் நடந்த கல்வி வளர்ச்சி நாள் உள்ளிட்ட முப்பெரும் விழாவுக்கு தலைமை ஆசிரியர் மோகன் தலைமை வகித்தார். மதுரை வானொலி நிலைய நிகழ்ச்சி நிர்வாகி பொன்.தனபாலன் சிறப்புரையாற்றினார்.  தமிழாசிரியர் சண்முகவேலு இலக்கிய மன்றத்தை தொடக்கி வைத்தார். வேளாண்மை அலுவலர் ஆறுமுகம் மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார்.  உதவித் தலைமை ஆசிரியர் டேவிட், தமிழாசிரியர் மு.மகேந்திரபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வன்னிவேலம்பட்டி அரசுப் பள்ளி:  தே.கல்லுப்பட்டி ஒன்றியம் வன்னிவேலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவுக்கு பெற்றோர், ஆசிரியர் கழகத் தலைவர் சுப்புராஜ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பாஸ்கரன், தமிழாசிரியை அய்யம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தும்மநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவுக்கு தலைமை ஆசிரியை பரமேஸ்வரி தலைமை வகித்தார்.  தலைமை ஆசிரியர் ரெகுராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டி: பூச்சிப்பட்டி கள்ளர் மேல்நிலைப் பள்ளி: இப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தமிழ் ஆசிரியை அ. ஜெயா,  ஆங்கில ஆசிரியை இ. இளவரசி ஆகியோர் தலைமை வகித்தனர். விழாவில் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை,  ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
உசிலம்பட்டி ப.ஆ.  சாலையில் உள்ள நாடார் சரஸ்வதி பள்ளி: இப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன் தலைமையில்  காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முத்துவிஜயபாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் சிறப்புரையாற்றினார்.  தமிழாசிரியர் ஜேக்கப் ஜெயசிங் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
கருமாத்தூர் புனித கிளாரட் மேல்நிலைப் பள்ளி: இப்பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவுக்கு அருள்தந்தை அலெக்ஸ் ஆனந்தராஜ் தலைமை வகித்தார்.
ஆசிரியர் கரோலினா வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் முன்னிலை வகித்தார். ஆசிரியர் அனுசுயா காமராஜர் பற்றி பேசினார். தொடர்ந்து மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com