மதுரையில் ஜூலை 19-இல் ஐம்பெரும் நாடகத் திருவிழா தொடக்கம்

ஸ்ரீசத்குரு சங்கீத சமாஜம் மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் மதுரையில் ஐம்பெரும் நாடகத் திருவிழா ஜூலை 19-இல் தொடங்கி ஜூலை 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஸ்ரீசத்குரு சங்கீத சமாஜம் மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் மதுரையில் ஐம்பெரும் நாடகத் திருவிழா ஜூலை 19-இல் தொடங்கி ஜூலை 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 நாடகத் திருவிழாவை இயல் இசை நாடக மன்றத் தலைவர் இசையமைப்பாளர் தேவா ஜூலை 19-ஆம் தேதி தொடக்கிவைக்கிறார். ஸ்ரீ சத்குரு சங்கீத சமாஜ நிர்வாகிகள் எல். ராஜாராம், எஸ். வெங்கட்டநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
 முதல் நாள் மாலை 6 மணிக்கு கிரேஸி மோகனின் "மீசை ஆனாலும் மனைவி' நகைச்சுவை நாடகம், ஜூலை 20-ஆம் தேதி கோவை கே.ஆர்.எஸ். வழங்கும் "ஸ்னேகம்' குடும்ப நாடகம், ஜூலை 21-இல் சென்னை கலைவாணி வழங்கும் உறவோடு விளையாடு, ஜூலை 22-இல் சென்னை யுனெடெட் விஷுவல்ஸ் வழங்கும்"ஸ்ரீ தியாகராஜர்', ஜூலை 23-இல் சென்னை மயூரப்ரியா கிரியேஷன்ஸ் வழங்கும் "விவாஹமாலை. காம் ' ஆகிய நாடகங்கள் இடம்பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com