காற்றில் முறிந்து விழுந்த மரக்கிளை அகற்றம்
By DIN | Published on : 18th July 2017 08:43 AM | அ+அ அ- |
காற்றில் விழுந்த மரக்கிளையை பொதுமக்களுடன் சேர்ந்து தீயணைப்புத்துறையினர் திங்கள்கிழமை அகற்றினர்.
தெற்குவாசல் தெற்கு மாரட் வீதி பேருந்து நிறுத்தம் அருகே 50 ஆண்டுகளுக்கு மேலான அரசமரம் ஒன்று இருந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை மாலை வீசிய காற்றில் இந்த மரத்தின் பெரிய கிளை ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5-க்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. மேலும், மின்கம்பிகள் அறுந்ததில் அப்பகுதியில் சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மின் ரம்பங்களைக் கொண்டு மரக்கிளையை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து பொதுமக்களும் மரக்கிளையை அப்புறப்படுத்தினர். இதனால் மரக்கிளையை அப்புறப்படுத்தும் பணி வேகமாக முடிந்தது. இதையடுத்து அப்பகுதியில் விரைவில் போக்குவரத்து சீரானது.