நடிகர் சிவாஜிகணேசன் நினைவு நாள்: அரசியல் கட்சியினர்  மலர் அஞ்சலி

மதுரையில் நடிகர் சிவாஜிகணேசனின் 16-ஆவது நினைவு நாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர், ரசிகர் மன்றத்தினர் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மதுரையில் நடிகர் சிவாஜிகணேசனின் 16-ஆவது நினைவு நாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர், ரசிகர் மன்றத்தினர் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் சிவாஜிகணேசனின் 16-ஆவது நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மதுரை ராஜா முத்தையா மன்றம் அருகே உள்ள சிவாஜிகணேசனின் சிலைக்கு கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பாஜக சார்பில் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தலைமையில் மாவட்டத் தலைவர் சசிராமன், பொதுச்செயலர் பாரதி ராஜா மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
திமுக தெற்கு மாவட்டச் செயலர் கோ.தளபதி, வடக்கு மாவட்ட ச் செயலர் க.வேலுச்சாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், மக்களவை முன்னாள் உறுப்பினர் ஏஜிஎஸ்.ராம்பாபு, மாவட்டத் தலைவர் சேதுராமன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
ஜனதா தளம் கட்சியின் சார்பில்  க.ஜான்மோசஸ், மருதுபாண்டியர் பேரவைத் தலைவர் ஆர். மணி, சிவாஜிகணேசன் ரசிகர் மன்ற மாநகர் மாவட்டத் தலைவர் முருகவிலாஸ் ஹரி, புறநகர் மாவட்டத் தலைவர் செல்வராஜ், ரஜினிகாந்த் ரசிகர் மன்றத் தலைவர் பால.தம்புராஜ், வல்லரசு பார்வர்டு பிளாக் தலைவர் அம்மாசி மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com