குறும்பட வெளியீட்டு விழா

மதுரையைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் யோகி பிரம்மனின் குறும்பட வெளியீடு மற்றும் பாடலாசிரியர் தமிழன் இளங்கோவின் பாடல் வெளியீடு நிகழ்ச்சி

மதுரையைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் யோகி பிரம்மனின் குறும்பட வெளியீடு மற்றும் பாடலாசிரியர் தமிழன் இளங்கோவின் பாடல் வெளியீடு நிகழ்ச்சி காமராஜர் சாலையில் உள்ள அம்பிகை திரையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் குறும்பட இயக்குநர் யோகி பிரம்மன் இயக்கிய "மரணம் நிச்சயம்' என்ற புகைப்பழக்கத்தின் தீமை குறித்து விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து பாடலாசிரியர் தமிழன் இளங்கோ எழுதிய தமிழ் மொழியின் பெருமைகள் பற்றிய தமிழ் தமிழாய் பாடலும் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் வி. பொன்ராஜ் கலந்து கொண்டார். குறும்படத்தை இயக்கிய குழுவினரை நடிகர் அபிசரவணன் பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com