மதுரையில் 28 மையங்களில் குடிமைப் பணி முதன்மை தேர்வு

மத்திய அரசின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப்பணி முதன்மைத் தேர்வு மதுரையில் 28 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப்பணி முதன்மைத் தேர்வு மதுரையில் 28 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் மத்திய அரசு தேர்வாணையம் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பணிகளுக்கான முதன்மைத் தேர்வை நடத்திவருகிறது. மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்வுக்கு மொத்தம் 8,303 பேர் விண்ணப்பித்திருந்தனர். மதுரையில் டோக் பெருமாட்டி, மதுரைக் கல்லூரி உள்ளிட்ட 28 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
காலையில் நடைபெற்ற தேர்வில் 3,528 பேர் பங்கேற்றனர். 4775 பேர் பங்கேற்கவில்லை. மாலையில் நடைபெற்ற தேர்வில் 3460 பேர் பங்கேற்று எழுதினர். 4843 பேர் பங்கேற்கவில்லை.
காலையில் 42.5 சதவிகிதம் பேரும், மாலையில் 41.7 சதவிகிதம் பேரும் தேர்வில் பங்கேற்றனர். டோக் பெருமாட்டி கல்லூரி வளாகத்தில் அமைந்த தேர்வறையை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் பார்வையிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com